/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துார்வாரப்படாத கால்வாய் தொற்று பரவும் அபாயம்
/
துார்வாரப்படாத கால்வாய் தொற்று பரவும் அபாயம்
ADDED : மார் 17, 2025 01:32 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னகளக்காட்டூர். கிராமத்தில் உள்ள பெரும்பாலான கழிவுநீர் கால்வாய், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல், துார்வார முடியாத நிலையில் சிதைந்து கிடக்கிறது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது.
மழைக்காலத்தில் மழைநீரும், கழிவுநீரும் தெருவில் தேங்குவது வழக்கமாக உள்ளது.
கழிவுநீர் கால்வாயை துப்புரவு பணியாளர்களை கொண்டு ஊராட்சி நிர்வாகம் முறையாக துார்வாராததால், பல இடங்களில் குப்பை குவிந்து அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
எனவே, கழிவுநீரை வெளியேற்றவும், கால்வாயை சீரமைக்கவும், ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.