/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த மின்கம்பங்களில் மின்மாற்றி உடைந்து விழும் அபாயம்
/
பழுதடைந்த மின்கம்பங்களில் மின்மாற்றி உடைந்து விழும் அபாயம்
பழுதடைந்த மின்கம்பங்களில் மின்மாற்றி உடைந்து விழும் அபாயம்
பழுதடைந்த மின்கம்பங்களில் மின்மாற்றி உடைந்து விழும் அபாயம்
ADDED : மார் 21, 2025 02:56 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சிக்குட்பட்டது உத்தண்ட மகா ராஜபுரம் கிராமம். இங்கு, 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்து, வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அகூர்- உத்தண்ட மகா ராஜபுரம் செல்லும் சாலையோரம் எஸ்.எஸ்.4 மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் மின்மோட்டாருக்கும், வீடுகள் மற்றும் தெரு விளக்குகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர, 30க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கும் இந்த மின்மாற்றியில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மின்மாற்றியின் மின்கம்பங்கள் முறையாக பராமரிக்காததால், மின்கம்பத்தின் சிமென்ட் தளம் பெயர்ந்து, இரும்பு கம்பி வெளியே தெரிகின்றன. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் உடைந்து விழும் அபாய நிலை உள்ளது.
பழுதடைந்த மின்மாற்றியின் கம்பங்களை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பலமுறை திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர், உதவி பொறியாளர்களிடம் புகார் தெரிவித்து, மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
★★