sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.8 கோடியில் சாலை விரிவாக்க பணி திருத்தணியில் நெரிசலுக்கு இனி 'குட்பை'

/

ரூ.8 கோடியில் சாலை விரிவாக்க பணி திருத்தணியில் நெரிசலுக்கு இனி 'குட்பை'

ரூ.8 கோடியில் சாலை விரிவாக்க பணி திருத்தணியில் நெரிசலுக்கு இனி 'குட்பை'

ரூ.8 கோடியில் சாலை விரிவாக்க பணி திருத்தணியில் நெரிசலுக்கு இனி 'குட்பை'


ADDED : ஜூலை 24, 2025 01:58 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க மாநில நெடுஞ்சாலை, 8.27 கோடி ரூபாயில் சாலை விரிவாக்க பணிகள் துவங்கப்படஉள்ளன.

திருத்தணி மாநில நெடுஞ்சாலை துறையினர் மொத்தம், 226 கிலோ மீட்டர் துாரம் நெடுஞ்சாலையை பராமரித்தும், புதிய சாலைகள் அமைத்தும் வருகின்றனர்.

இந்நிலையில், பல இடங்களில் நெடுஞ்சாலை குறுகியதாகவும், பழுதடைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இதை தடுக்கும் வகையில் திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாகவும், குறுகலான சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருத்தணி- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை நான்கு கி.மீ., துாரம் இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக, 25 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், திருத்தணி- மின்னல் நெடுஞ்சாலை, 2.5 கி.மீ., துாரத்திற்கு நெடுஞ்சாலை விரிவாக்கம் பணிகள், 2.80 கோடி ரூபாயிலும், கே.ஜி.கண்டிகை - சிறுகுமி மாநில நெடுஞ்சாலை, 2 கி.மீ., துாரம் சாலை விரிவாக்கம்.

சிறுபாலங்கள் ஏற்படுத்த, 3.77 கோடி ரூபாயிலும், காவேரிராஜபுரம்- அரக்கோணம் சாலை, ஒரு கி.மீ., துாரத்திற்கு சாலை விரிவாக்கம், 1.70 கோடி ரூபாயிலும் என மொத்தம், 8.27 கோடி ரூபாயில் சாலை விரிவாக்கம் பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன.

இதனால் மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் தடுக்கப்படும் என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துஉள்ளனர்.

இது குறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன் கூறியதாவது:

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மின்னல் சாலை, சிறுகுமி சாலை மற்றும் காவேரிராஜபுரம் சாலை விரிவாக்கம் பணிகள் மற்றும் சிறுபாலங்கள் அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பணிகளுக்கு டெண்டர் விரைவில் விடப்படும். சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைப்பதற்கு மின்வாரிய துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பணிகள் ஆறு மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us