/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை விரிவாக்க பணி சுணக்கம் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
/
சாலை விரிவாக்க பணி சுணக்கம் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
சாலை விரிவாக்க பணி சுணக்கம் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
சாலை விரிவாக்க பணி சுணக்கம் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
ADDED : செப் 29, 2025 01:33 AM

திருத்தணி:திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் மந்தமாக நடப்பதால் வாகன ஓட்டிகள், மக்கள் கடும் சிரமப் படுகின்றனர்.
திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலை இருவழிப்பாதையாக உள்ளது. இந்த நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருப்பதால் போக்கு வரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகளவில் நடந்து வந்தது.
இதையடுத்து, திருத்தணி நெடுஞ்சாலைத் துறை திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலையை இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, 120 கோடி ரூபாய் திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தது.
கடந்த மார்ச் மாதம் தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை நான்கு கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை மாற்றுவதற்கு, 25 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணி துவங்கியது.
கடந்த, 15 நாட்களுக்கு முன் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. தற்போது பேருந்து நிறுத்தம் மற்றும் இரு சக்கர வாகனங்கள், மக்கள் செல்வதற்கு வசதியாக சிமென்ட் கல் சாலை அமைப்பதற்கு சாலையோரம் பள்ளம் தோண்டி பணி மேற்கொள்ளப் பட்டது.
பல இடங்களில் பள்ளம் தோண்டி, 10 நாட்கள் ஆகியும் கற்சாலை அமைக்காத தால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் மக்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என, வாகன ஓட்டிகள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.