/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எச்சரிக்கை பதாகை இல்லாமல் சாலை விரிவாக்க பணிகள்
/
எச்சரிக்கை பதாகை இல்லாமல் சாலை விரிவாக்க பணிகள்
ADDED : மார் 31, 2025 03:07 AM

ஆர்.கே.பேட்டை:திருதத்ணியில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. திருத்தணி அடுத்த எர்ப்பநாயுடு கண்டிகை முதல் பீரகுப்பம் வரை சாலை விரிவாக்க பணி நடக்கிறது.
அதேபோல், ஆர்.கே.பேட்டை அடுத்த அஸ்வரேவந்தாபுரம் முதல் கோபாலபுரம் வரையிலும், முதல்கட்டமாக சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கே.ஜி.கண்டிகை அருகே தடுப்புகள் இன்றி சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்த பகுதியில், கடந்த 7ம் தேதி பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.
தற்போது, ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரம் பகுதியில், சாலை விரிவாக்கத்திற்காக பாலம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. பாலம் விரிவாக்கம் செய்யப்படும் பகுதி, திருப்பத்தில் அமைந்துள்ளது.
இங்கு எந்தவித தடுப்பும், எச்சரிக்கை பதாகையும் வைக்கப்படாமல் அலட்சியமாக பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து இந்த மார்க்கமாக வரும் வாகனங்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சாலை விரிவாக்கம் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பதாகை வைக்க, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.