/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையா... கழிவு நீர் ஓடையா! தண்டுரைவாசிகள் தினசரி அவதி
/
சாலையா... கழிவு நீர் ஓடையா! தண்டுரைவாசிகள் தினசரி அவதி
சாலையா... கழிவு நீர் ஓடையா! தண்டுரைவாசிகள் தினசரி அவதி
சாலையா... கழிவு நீர் ஓடையா! தண்டுரைவாசிகள் தினசரி அவதி
ADDED : ஜன 13, 2025 01:47 AM

ஆவடி:ஆவடி மாநகராட்சி தண்டுரை பகுதியில் தினசரி வழந்தோடும் கழிவு நீரால் பகுதிவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், தண்டுரை, 20வது வார்டு, ஏகவள்ளி அம்மன் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கழிவுநீர் மீது நடந்து சென்று வருகின்றனர். இதனால், நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், பாதாள சாக்கடையில் அடைப்பை சரி செய்து, கழிவுநீர் வழிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.