/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை வியாபாரிகள், வாகனங்களுக்கு தடுப்பு அமைத்து எல்லை நிர்ணயம்
/
சாலை வியாபாரிகள், வாகனங்களுக்கு தடுப்பு அமைத்து எல்லை நிர்ணயம்
சாலை வியாபாரிகள், வாகனங்களுக்கு தடுப்பு அமைத்து எல்லை நிர்ணயம்
சாலை வியாபாரிகள், வாகனங்களுக்கு தடுப்பு அமைத்து எல்லை நிர்ணயம்
ADDED : டிச 29, 2024 01:58 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை, கடந்த நவம்பர் மாதம், 16ம் தேதி மாநில நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
வாழ்வாதாரம் இழந்த, 100க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், நிரந்தர இடம் கேட்டு போராடினர். கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள இடத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு இடம ஒதுக்குவதாக கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது. அதற்கான வேலைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றனர்.
இடம் ஒதுக்கும் வரை, வாழ்வாதாரத்திற்கு வழி தேடி, மீண்டும் சாலையோர கடைகள் முளைக்க துவங்கின. ஒரு கட்டத்தில் பழையபடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் சூழல் நிலவியது.
இதையடுத்து, சாலையின் இரு புறமும் தற்காலிக தடுப்பு அமைத்து, கயிறு கட்டி சாலையோர வியாபாரிகளுக்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் கும்மிடிப்பூண்டி போலீசார், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.