/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை விரிவாக்கம் செய்தும் பயனில்லை மின்கம்பங்களால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

ADDED : பிப் 17, 2025 02:01 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த, காரனோடையில் இருந்து, சோத்துப்பெரும்பேடு, அட்டப்பாளையம், புதுகுப்பம், கண்ணியம்பாளையம் கிராமங்கள் வழியாக சீமாவரம் மற்றும் மீஞ்சூருக்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளன. இதில், கண்ணியம்பாளையம் கிராமத்தில், இரண்டு இடங்களில் உள்ள மின்கம்பங்கள் சாலையின் நடுவில் உள்ளது.
கடந்த ஆண்டு புதியதாக சாலை போடும்போது விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போதும் மின்கம்பங்களை நகர்த்தாமல், அவற்றை சுற்றிலும் சாலை போடப்பட்டது.
மீஞ்சூர் நோக்கி வேகமாக செல்லும் வாகனங்கள், போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்துள்ள மின்கம்பங்கள் இருக்கும் பகுதியை கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றன.
மின்கம்பங்களுக்கு இடையே பயணிக்கும் ஓயர்களும் தாழ்வாக இருக்கின்றன. நெல் மூட்கைளை ஏற்றிச் செல்லும் லாரிகள் இந்த வழித்தடத்தில் அதிகளவில் பயணிக்கின்றன.
அவை, எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட, இடதுபுறம் ஒதுங்கும்போது, தாழ்வாக உள்ள மின்ஒயர்களில் உரசியபடி செல்கின்றன.
இடையூறு மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்ஒயர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மின்கம்பங்களை, சாலையோரங்களில் பதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.