/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் வடிகால்வாயை அடைத்து சாலை விரிவாக்க பணி
/
மழைநீர் வடிகால்வாயை அடைத்து சாலை விரிவாக்க பணி
ADDED : பிப் 06, 2026 07:14 AM

திருவள்ளூர்: மழைநீர் வடிகால்வாயை அடைத்து சாலையை அகலப்படுத்தி வருவதால், மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை மூலம் நடைபெற்று வருகிறது. இதற்காக, ஐ.சி.எம்.ஆர்., சிறுவானுார்கண்டிகை, புல்லரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், ஏற்கனவே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய்கள் அடைக்கப்பட்டுள்ளன.
மழைக்காலத்தில், திருப்பாச்சூர், சிறுவானுார் ஊராட்சிகள் வழியாக, சாலையோரம் அமைந்துள்ள ஜெ.ஜெ.அவென்யூ, சிறுவானுார் கண்டிகை, புல்லரம்பாக்கம் வழியாக மழைநீர் சாலையை கடந்து, மறுபகுதியில் உள்ள ஏரிகளுக்கு செல்கிறது.
தற்போது, ஏற்கனவே இருந்த கால்வாய்களை அகலப்படுத்தாமல், அவற்றை மண் கொண்டு நிரப்பி, அடைக்கப்பட்டு வருகிறது. இதனால், மழைநீர் வெளியேற வழியின்றி, சாலையோரம் உள்ள குடியிருப்புகளில், தேங்கி விடும் அபாயம் உள்ளது.
எனவே, நெடுஞ்சாலை துறையினர், ஏற்கனவே உள்ள வடிகால்வாய்களையும் அகலப்படுத்தி, சாலை அமைக்க வேண்டும் என, சிறுவானுார்கண்டிகை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

