/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விடியங்காடு கூட்டு ரோட்டில் விபத்தை தவிர்க்க சாலை தடுப்புகள்
/
விடியங்காடு கூட்டு ரோட்டில் விபத்தை தவிர்க்க சாலை தடுப்புகள்
விடியங்காடு கூட்டு ரோட்டில் விபத்தை தவிர்க்க சாலை தடுப்புகள்
விடியங்காடு கூட்டு ரோட்டில் விபத்தை தவிர்க்க சாலை தடுப்புகள்
ADDED : செப் 26, 2025 04:04 AM

ஆர்.கே.பேட்டை:விபத்துகளை தவிர்க்க, விடியங்காடு கூட்டுசாலை இணையும் பகுதியில், சாலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் வழியாக, பொன்னை செல்லும் நெடுஞ்சாலையில் இணைகிறது விடியங்காடு கூட்டு சாலை.
வளைவாக அமைந்துள்ள இச்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன. இதனால், விடியங்காடு கூட்டு சாலையில் பேருந்துக்காக காத்திருப்பவர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.
இதையடுத்து, இந்த பகுதியில் சாலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதனால், வாகனங்களின் வேகத்தை குறைத்து இயக்க வேண்டிய கட்டாயம் ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த இணைப்பு சாலையில், இதுவரை பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை. பயணியர் நிழற்குடையும், உயர்கோபுர மின்விளக்கும் அமைக்க வேண்டும் என்றும், பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.