/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடிப்பூண்டியில் கனமழை குளமாக மாறிய சாலைகள்
/
கும்மிடிப்பூண்டியில் கனமழை குளமாக மாறிய சாலைகள்
ADDED : அக் 17, 2025 11:22 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் நேற்று பெய்த கனமழையால், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், குளம் போல் மழைநீர் தேங்கியது.
தமிழகத்தில், நேற்று முதல் வடகிழக்கு பருவமழை துவங்குவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பகுதியில், நேற்று அதி காலை முதல் கனமழை பெய்தது.
நேற்று காலை 6:00 - மாலை 5:00 மணி வரை, 15 செ.மீ., மழை பதிவானது. இதனால், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர், பெருவாயல், சிப்காட் சந்திப்பு, பெத்திக்குப்பம், ஓபுளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது.
வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் கடந்து சென்றனர். தொடர்ந்து, மழைநீரை வெளியேற்றும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ள கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு சாலையில், 300 மீட்டர் நீளத்திற்கு, குளம் போல் தேங்கிய மழைநீரால், பள்ளி மாணவர்கள், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கும் மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால், சிப்காட் சென்று வரும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருத்தணியில் நேற்று காலை முதல் மாலை வரை பலத்த மழை பெய்தது.