/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 30, 2025 02:12 AM

அரண்வாயல்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருவள்ளூர் ஒன்றியத்துக்குட்பட்ட அரண்வாயல் ஊராட்சி.
இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில், நெடுஞ்சாலையோரம் சேகரமாகும் குப்பையை, துப்புரவு பணியாளர்கள் சேகரித்து, சாலையோரம் ஆங்காங்கே குவித்து எரித்து வருகின்றனர்.
இதனால், ஏற்படும் புகையால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதை மாவட்ட கலெக்டர் எச்சரித்தும், அதனை ஊராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் கடை பிடிப்பதில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் குப்பை எரிக்கும் பணியில் ஈடுபடும் ஊராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.