/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் குப்பை எரிப்பு குடியிருப்புவாசிகள் அவஸ்தை
/
சாலையோரம் குப்பை எரிப்பு குடியிருப்புவாசிகள் அவஸ்தை
சாலையோரம் குப்பை எரிப்பு குடியிருப்புவாசிகள் அவஸ்தை
சாலையோரம் குப்பை எரிப்பு குடியிருப்புவாசிகள் அவஸ்தை
ADDED : ஏப் 25, 2025 02:18 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இதில், பல ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையோரம் மற்றும் காலி மனைகளில் சேகரமாகும் குப்பையை துப்புரவு பணியாளர் முறையாக அகற்றுவதில்லை.
மேலும், அப்பகுதியிலேயே குப்பையை தீயிட்டு எரித்து வருகின்றனர். இவ்வாறு எரிப்பதால் ஏற்படும் புகையால், பகுதிவாசிகள் மற்றும் வாகனங்களில் செல்வோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சில நேரங்களில் புகையால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊராட்சி பகுதியில் குப்பையை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்க விடுத்துள்ளனர்.