/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : மே 12, 2025 11:24 PM
திருத்தணி,திருத்தணி - -நாகலாபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வேலஞ்சேரி ஊராட்சியில், வேலஞ்சேரி மற்றும் காலனியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவை துாய்மை பணியாளர்கள் சேகரித்து, உரக்கிடங்கிற்கு எடுத்து செல்லாமல், மாநில நெடுஞ்சாலையோரம் கொட்டுகின்றனர்.
மேலும், குப்பை அதிகரிக்கும் போது தீயிட்டு எரித்து விடுகின்றனர். இதனால், மாநில நெடுஞ்சாலை முழுதும் புகை மூட்டம் ஏற்படுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கிறது.
எனவே, சாலையோரம் குப்பை கொட்டி தீ வைத்து எரிப்பதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.