/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் ரூ.60 லட்சத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம்
/
கும்மிடியில் ரூ.60 லட்சத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம்
கும்மிடியில் ரூ.60 லட்சத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம்
கும்மிடியில் ரூ.60 லட்சத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம்
ADDED : ஜன 08, 2025 12:49 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை, கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
வாழ்வாதாரம் இழந்த, 150க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், நிரந்தர இடம் கேட்டு, கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜனிடம் முறையிட்டனர். விரைவில் இடம் தேர்வு செய்து ஒதுக்கப்படும் என, எம்.எல்.ஏ., தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ., தெரிவித்ததன்படி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேருந்து நிலையம் அருகே, 40 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.
ஒதுக்கிய இடத்தில் தற்போது, 60 லட்சம் ரூபாய் செலவில் கடைகள் நிறுவப்பட்டு வருகின்றன. நான்கு வரிசைகள் ஏற்படுத்தி, அதில், 170 கடைகள் நிறுவப்பட உள்ளன.
இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, சாலையோர வியாபாரிகளுக்கு ஒப்படைக்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.