/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
/
பொன்னேரியில் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
ADDED : ஜன 08, 2025 07:54 PM
பொன்னேரி:பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில், வேண்பாக்கம் பகுதியில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பூஜை முடிந்து கோவில் மூடப்பட்டது.
நேற்று காலை, கோவில் திறக்கப்பட்டபோது, அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பதை கோவில் நிர்வாகிகள் கண்டனர்.
இது குறித்து, பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு, உண்டியல் உடைப்பில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
இந்த கோவில் அமைந்துள்ள இடத்தில் இருந்து, அதே சாலையில், ஒரு கி.மீ., தொலைவில் கொக்குமேடு கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் உண்டியலையும் உடைக்க முயற்சித்து, முடியாமல் திருடர்கள் தப்பியுள்ளனர்.
இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.