/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'ரோமியோ'க்கள் அட்டகாசம் மாணவியரின் பெற்றோர் அச்சம்
/
'ரோமியோ'க்கள் அட்டகாசம் மாணவியரின் பெற்றோர் அச்சம்
'ரோமியோ'க்கள் அட்டகாசம் மாணவியரின் பெற்றோர் அச்சம்
'ரோமியோ'க்கள் அட்டகாசம் மாணவியரின் பெற்றோர் அச்சம்
ADDED : மார் 19, 2025 07:29 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், ஆற்காடுகுப்பம் பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிகளில் 1,000க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர்.
சமீப நாட்களாக பள்ளி நேரம் துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் மாணவியர் சாலையில் நடந்து வரும்போது, இருசக்கர வாகனங்களில் உலா வரும் 'ரோமியோ'க்கள் தொந்தரவு கொடுக்கின்றனர். சில மாணவியர் தங்கள் வீட்டில் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர். பலர் பயத்தில் மறைத்து விடுகின்றனர்.
தற்போது, தேர்வு துவங்கியுள்ளதால், மதியம் தேர்வு முடிந்து வரும் மாணவியர் பேருந்து நிலையம் சாலை வழியாக சொல்லும் போது, இந்த ரோமியோக்கள் அவர்களின் கவனத்தை திசை திருப்ப எதையாவது செய்கின்றனர். இதனால், பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, பள்ளி நேரங்களில் போலீசார் பேருந்து நிலைய பகுதிகளில் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்