/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரடு முரடான அண்ணாமலைச்சேரி சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
கரடு முரடான அண்ணாமலைச்சேரி சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
கரடு முரடான அண்ணாமலைச்சேரி சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
கரடு முரடான அண்ணாமலைச்சேரி சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஏப் 04, 2025 02:30 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த அகரம் கிராமத்தில் இருந்து அண்ணாமலைச்சேரிக்கு, 5 கி.மீ., சாலை சேதம் அடைந்துள்ளது.
இந்த சாலை கடந்த, 2019ல் கிராம சாலைத்திட்டத்தின் கீழ், புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல், சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்தும் கரடு முரடாக உள்ளது.
அண்ணாமலைச்சேரி, வெப்பத்துார் ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராமவாசிகள் அத்யவாசிய தேவைகளுக்கும், அரசு மருத்துவமனைக்கும் தேவம்பட்டு மற்றும் கும்மிடிப்பூண்டிக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். சாலை சேதம் அடைந்து இருப்பதால், கிராமவாசிகள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது தடுமாற்றம் அடைகின்றனர்.
சிறு சிறு விபத்துக்களில் சிக்கி தவிக்கின்றனர். விபத்துக்களை தவிர்க்க பள்ளங்களில், செடிகளை வைத்து வாகன ஒட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.
சாலை சீரமைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், உரிய நிதி ஒதுக்கீடு செய்து, சாலையை புதுப்பிக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

