/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசையில் ரவுடி கூட்டாளி கைது
/
திருமழிசையில் ரவுடி கூட்டாளி கைது
ADDED : டிச 08, 2025 06:31 AM

திருமழிசை: திருமழிசையில் பிரபல ரவுடியின் கூட்டாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமழிசை அடுத்த காவல்சேரி பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ், 29. பிரபல ரவுடியாக இருந்த எபினேசனின் கூட்டாளியான இவர் மீது மூன்று கொலை வழக்கு உட்பட 14 வழக்குகள் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு திருமழிசை பேருந்து நிலையம் அருகே ஆகாஷ் பதுங்கியிருப்பதாக வெள்ளவேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார், சென்று ஆகாஷை நேற்று கைது செய்தனர்.
போலீசார் ஆகாஷை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
ரவுடி எபினேசன் 2024ம் ஆண்டு செப்டம்பரில் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மண்ணுார் பகுதியில் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்கு வாங்கும் நோக்கத்தில் ஆகாஷ் பதுங்கியிருந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

