/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மப்பேடு நெடுஞ்சாலையில் கழிவுநீர் தொற்று: அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
மப்பேடு நெடுஞ்சாலையில் கழிவுநீர் தொற்று: அபாயத்தில் வாகன ஓட்டிகள்
மப்பேடு நெடுஞ்சாலையில் கழிவுநீர் தொற்று: அபாயத்தில் வாகன ஓட்டிகள்
மப்பேடு நெடுஞ்சாலையில் கழிவுநீர் தொற்று: அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 08, 2025 06:31 AM

மப்பேடு: மப்பேடு பகுதியில் நெடுஞ்சாலையில் வழிந் தோடும் கழிவுநீரால் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் தினமும், 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில், கால்வாய் இல்லாததால், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நெடுஞ்சாலையில் ஆறு போல வழிந்தோடுகிறது
இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மப்பேடு ஊராட்சியில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.