/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலீசாரை மிரட்டி தப்ப முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
/
போலீசாரை மிரட்டி தப்ப முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
போலீசாரை மிரட்டி தப்ப முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
போலீசாரை மிரட்டி தப்ப முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
ADDED : டிச 10, 2024 01:03 AM

சென்னை, டிதிருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த மதியழகனின் மகன் அறிவழகன், 24. இவர் மீது திருட்டு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் டிமிக்கி கொடுத்து வந்த அறிவழகனை, ஓட்டேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், எஸ்.ஐ., பிரேம்குமார் தலைமையிலான தனிப்படையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், அறிவழகன், ஆந்திராவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, பிரேம்குமார் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் ஆந்திரா சென்றனர். அங்கு செல்லும்போதே, அறிவழகன் சென்னைக்கு தப்பி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்னை திரும்பினர்.
அயனாவரம், பனந்தோப்பு ரயில்வே காலனி, 2வது தெரு பகுதியில் உள்ள பழைய குடியிருப்பில், அறிவழகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற போலீசார், அவரை கைது செய்ய முற்பட்டபோது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி, 23 போலீசாரை மிரட்டி, அறிவழகன் தப்ப முயன்றார்.
அப்போது, எஸ்.ஐ., பிரேம்குமார், தான் வைத்திருந்த துப்பாக்கியால், அறிவழகனின் முழங்காலுக்கு கீழே சுட்டு பிடித்தார்.
மேலும், அறிவழகனிடம் இருந்து துப்பாக்கி, கத்தி மற்றும் 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார், காயமடைந்த அறிவழகனை, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.