/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ராயபுரம் ரைசிங் அணி கிரிக்கெட்டில் வெற்றி
/
ராயபுரம் ரைசிங் அணி கிரிக்கெட்டில் வெற்றி
ADDED : நவ 20, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமியின், ஜெயலட்சுமி லீக் கம் நாக் அவுட் கிரிக்கெட் டி - 20 போட்டி நடந்து வருகிறது. பல்வேறு நிறுவனம், அகாடமிகளைச் சேர்ந்த ஒன்பது அணிகள், தலா எட்டு லீக் போட்டிகள் அடிப்படையில் மோதுகின்றன.
நேற்று முன்தினம், வேப்பேரியில் நடந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ரைசிங் ஸ்டார் அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் கு வித்தது.
அடுத்து களமிறங்கிய சாகுல் காய்ஸ் அணி, 17.2 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராயபுரம் ரைசிங் ஸ்டார் அணி, 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

