/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாவட்ட பால் பேட்மின்டன் லேடி சிவசாமி பள்ளி முதலிடம்
/
மாவட்ட பால் பேட்மின்டன் லேடி சிவசாமி பள்ளி முதலிடம்
மாவட்ட பால் பேட்மின்டன் லேடி சிவசாமி பள்ளி முதலிடம்
மாவட்ட பால் பேட்மின்டன் லேடி சிவசாமி பள்ளி முதலிடம்
ADDED : நவ 20, 2025 03:43 AM
சென்னை: வருவாய் மாவட்ட அளவிலான பால் பேட்மின்டன் போட்டியில், 14 வயது பிரிவில், மாணவரில் அன்னை வேளாங்கண்ணி பள்ளியும், மாணவியரில் லேடி சிவசாமி பள்ளியும் முதலிடங்களை கைப்பற்றின.
பள்ளிக்கல்வித்துறையின் குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அதில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான வருவாய் மாவட்ட பால் பேட்மின்டன் போட்டி, அம்பத்துாரில் நேற்று முன்தினம் நடந்தது.
அதில், மாணவர் பிரிவு இறுதிப் போட்டியில், அன்னை வேளாங்கண்ணி பள்ளி மற்றும் கொட்டிவாக்கம் அரசு பள்ளி அணிகள் எதிர்கொண்டன.
அதில், 29 - 27, 18 - 29, 29 - 23 என்ற செட் கணக்கில், அன்னை வேளாங்கண்ணி பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடத்தை கைப்பற்றியது. கொடுங்கையூர் சென்னை அரசு பள்ளி மூன்றாம் இடத்தையும், விருகம்பாக்கம் டேனியல் தாமஸ் பள்ளி நான்காம் இடத்தையும் பிடித்தன.
அதேபோல், மாணவியர் பிரிவில், லேடி சிவசாமி பள்ளி, 35 - 21, 35 - 26 என்ற செட் கணக்கில் சேதுபாஸ்கரா பள்ளியை தோற்கடித்து முதலிடத்தை கைப்பற்றியது.
அடுத்து, கத்திவாக்கம் மற்றும் அசோக் நகர் அரசு பள்ளி அணிகள் முறையே, மூன்று மற்றும் நான்காம் இடங்களை வென்றன. மேலும், போட்டியில் முதலிடங்களை பிடித்த அணிகள், மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

