/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அய்யப்ப பக்தர்கள் இருவர் மினி லாரி மோதியதில் பலி
/
அய்யப்ப பக்தர்கள் இருவர் மினி லாரி மோதியதில் பலி
அய்யப்ப பக்தர்கள் இருவர் மினி லாரி மோதியதில் பலி
அய்யப்ப பக்தர்கள் இருவர் மினி லாரி மோதியதில் பலி
ADDED : நவ 20, 2025 03:43 AM
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, சாலையை கடக்க முயன்ற போது மினி லாரி மோதியதில், அய்யப்ப பக்தர்கள் இருவர் பலியாகினர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த முருக்கம்பட்டைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 36 பேர், சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று, டிராவல்ஸ் பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னுார் 'சிட்கோ' பகுதியில், அதிகாலை 5:00 மணிக்கு சாலையோரம் பேருந்தை நிறுத்தி விட்டு, டீ குடிக்க சாலையை கடந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரி, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதி, நிலை தடுமாறி சாலையை கடந்தவர்கள் மீது மோதியது.
இதில், அய்யப்ப பக்தர்களான கங்காதரன், சூர்யா சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆதி, நரசிம்மன் ஆகியோர் படுகாயமடைந்து, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆம்பூர் தாலுகா போலீசார், விபத்து ஏற்படுத்தி, தப்பியோடிய மினி லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

