/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் திருட்டு
/
மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : மே 15, 2025 09:34 PM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த சாணாங்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தி, 60. இவர் நேற்று பள்ளிப்பட்டு இந்தியன் வங்கி கிளைக்கு சென்று அவரது கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.
அதை தன்னுடைய பையில் வைத்துக்கொண்டு, அருகில் உள்ள ஆந்திரா வங்கி கிளைக்கு சென்று அவரது வங்கி கணக்கை சரிபார்த்துள்ளார்.
அவரது பையில் இருந்து வங்கி கணக்கு புத்தகத்தை வெளியில் எடுத்துள்ளார். அப்போது அவருக்கு அருகில், முகமூடி அணிந்த பெண் ஒருவர் இருந்துள்ளார்.
பின் வங்கிக்கு வெளியே வந்து அவரது பையை திறந்து பார்த்தபோது, பையில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை காணவில்லை. உடன் வங்கிக்குள் சென்று தேடியபோது, முகமூடி அணிந்திருந்த பெண்ணை காணவில்லை.
இது குறித்த புகாரில் பள்ளிப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.