/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மோசடி
/
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மோசடி
ADDED : மார் 20, 2025 02:15 AM
திருத்தணி:திருத்தணி அக்கைய்யநாயுடு சாலையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில், மேலாளராக சுரேஷ் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று திருத்தணி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருத்தணி அருகே தரணிவராகபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அசோகன், 50. இவர், எங்கள் நிதி நிறுவனத்தில், 2016 முதல் 2021ம் ஆண்டு வரை சீட் கட்டி தொழில் செய்து வந்தார். மேலும், 2016ம் ஆண்டு அசோகன், நிதி நிறுவனத்தில் இருந்து, 12.07 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
இதற்காக, அவருக்கு சொந்தமான அரக்கோணம் தாலுகா, தணிகை போளூர் பகுதியில் இருந்த இரண்டு வீட்டுமனைகளின் அசல் பத்திரங்களை அடகு வைத்துள்ளார். 2021 டிச., 19ம் தேதி, அசோகன் இறந்து விட்டார்.
இதையடுத்து, அவரது வாரிசுதாரர்கள் மனைவி லதா, மகன்கள் அஜித்குமார், விஜய் ஆகியோரிடம், எங்கள் நிதி நிறுவனத்தில் அசோகன் பெற்ற கடனை திருப்பி செலுத்துமாறு அறிவுறுத்தினோம்.
ஆனால் அவர்கள், எங்கள் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ள வீட்டுமனைகளை போலியாக ஆவணம் தயாரித்து, அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்து விட்டு தலைமறைவாகிவிட்டனர்.
எனவே, போலி ஆவணம் தயாரித்து, எங்கள் நிதி நிறுவனத்திற்கு தரவேண்டிய, 12.07 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.