/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிதி நிறுவனத்தில் ரூ.1.59 லட்சம் மோசடி
/
நிதி நிறுவனத்தில் ரூ.1.59 லட்சம் மோசடி
ADDED : நவ 07, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி காந்திரோடு பகுதி சேர்ந்தவர் பாஸ்கர், 30. இவர் திருத்தணியில் செயல்பட்டு வரும் ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் களப்பணியாளராக வேலை செய்து வந்தார். பாஸ்கர், நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற 11 வாடிக்கையாளர்களிடம், 1.59 லட்ச ரூபாய் வசூல் செய்து, அந்த பணத்தை நிதி நிறுவனத்தில் கட்டாமல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நிதி நிறுவன மேலாளர் அன்பரசு நேற்று திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

