/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிரிக்கெட் மைதானமாகும் ஏரிகள் செங்கையில் ரூ.16 கோடி வீண்
/
கிரிக்கெட் மைதானமாகும் ஏரிகள் செங்கையில் ரூ.16 கோடி வீண்
கிரிக்கெட் மைதானமாகும் ஏரிகள் செங்கையில் ரூ.16 கோடி வீண்
கிரிக்கெட் மைதானமாகும் ஏரிகள் செங்கையில் ரூ.16 கோடி வீண்
ADDED : நவ 03, 2025 10:28 PM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்தும், 80 சதவீத ஏரிகள் நீரின்றி வறண்டு, கிரிக்கெட் மைதானங்களாக உள்ளன. ஏரிகளை முறையாக துார்வாராமல், கண்துடைப்பிற்காக துார்வாரியதே இதற்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளை துார்வார, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், கடந்த ஏப்ரலில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 200 ஏரிகளை துார்வார, 16.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கடந்த ஏப்., 16ல், 'டெண்டர்' விடப்பட்டு, மே 16ம் தேதி, திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஏரியில் பூமி பூஜையுடன் துார்வாரும் பணிகள் துவக்கப்பட்டன. ஜூன் 5ல், ஊனமாஞ்சேரியில் உள்ள சித்தேரியில் துார்வாரும் பணி துவங்கியது.
அப்போது, ஏரிகள் துார்வாரும் பணியில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை அவசியம் என, பல தரப்பினரும் வலியுறுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஏரிகளில் துார்வார பூமி பூஜை மட்டும் போடப்பட்டதே தவிர, துார்வாரும் பணிகள் 1 சதவீதம் கூட நடக்கவில்லை.
அதனால், கடந்த 20 நாட்களில் நல்ல மழை பெய்தும், 80 சதவீத ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளன. ஏரிகள் துார்வாரபட்டு இருந்தால், 70 சதவீதம் ஏரிகள் நிரம்பியிருக்கும் என, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

