/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க கேட்டது ரூ.20 கோடி: வந்தது ரூ.2.50 கோடி
/
திருத்தணியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க கேட்டது ரூ.20 கோடி: வந்தது ரூ.2.50 கோடி
திருத்தணியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க கேட்டது ரூ.20 கோடி: வந்தது ரூ.2.50 கோடி
திருத்தணியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க கேட்டது ரூ.20 கோடி: வந்தது ரூ.2.50 கோடி
ADDED : மே 08, 2025 02:42 AM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், மொத்தம், 556 சாலைகள் உள்ளன. இதில், 186 சாலைகள் கான்கிரீட் சாலைகளும், 323 சாலைகள் தார்ச்சாலைகளும், 47 சாலைகள் மண்சாலைகளாக உள்ளன.
இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன், 44 மண் சாலைகள், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 4.46 கோடியில் தார்ச்சாலையாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருத்தணி நகராட்சியில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக குடிநீர் குழாய்கள் புதைப்பதற்காக அனைத்து சாலைகளும் சேதம் அடைந்துள்ளன.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பதற்கு, மொத்தம், 22 கோடி ரூபாய் தேவை என திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதே போல நகராட்சியில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்கு, 20 கோடி ரூபாய் தேவை எனவும், நகராட்சி நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் முதற்கட்டமாக, கான்கிரீட் சாலைகள் மட்டும் சீரமைப்பதற்கு, நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், 2025 - 26ம் ஆண்டு திட்டத்தின், 13.27 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்தும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்கு, வெறும் 16 தெருக்களில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், 2025 -26ம் ஆண்டு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்கு, வெறும், 2.50 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.
கான்கிரீட் சாலைகள் அமைப்பதில் சிக்கல்
நகராட்சியில், 186 கான்கிரீட் சாலைகள், 13.27 கோடியில் சீரமைகப்பட உள்ளன. இச்சாலைகள் சீரமைக்கப்பட்டாலும், மழைநீர் வடிகால்வாய் அமைக்காவிட்டால், மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை விரைவில் பழுதாகிவிடும்.
மேலும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தண்ணீர் செல்வதற்கு சிரமப்படுவர். எனவே, கான்கிரீட் சாலை சீரமைப்பு பணியுடன் மழைநீர் வடிகால்வாய் அமைத்தால் சாலை பாதுகாப்பாக இருக்கும்.