/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சொத்து வரிக்கு ரூ.2,000 லஞ்சம் மாஜி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை
/
சொத்து வரிக்கு ரூ.2,000 லஞ்சம் மாஜி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை
சொத்து வரிக்கு ரூ.2,000 லஞ்சம் மாஜி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை
சொத்து வரிக்கு ரூ.2,000 லஞ்சம் மாஜி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை
ADDED : அக் 29, 2024 08:16 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் ஆவடி - பூந்தமல்லி சாலை, பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பகத்சிங். 43.
இவர், தனது வீட்டிற்கு சொத்து வரி செலுத்த ஆவடி நகராட்சி அலுவலகத்தில் 2014ல் விண்ணப்பித்தார். அப்போது வருவாய் உதவியாளராக இருந்த ராமு என்பவர், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்த லஞ்சத்தை கொடுக்க விரும்பாத பகத்சிங், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, ஏழுமலை என்பவர் வாயிலாக, 2,000 ரூபாயை லஞ்சமாக ராமு பெற்றபோது, மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் சிறப்பு நீதிமன்றத்தில், ராமு மீது 2015ல் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கில், நீதிபதி மோகன் தீர்ப்பு வழங்கினார்.
வீட்டுக்கு சொத்து வரி விதிப்பதற்காக ஆவடி நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராமு, 61, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.