/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.25 கோடி திருத்தணி முருகன் கோவில் நிலம் மீட்பு
/
ரூ.25 கோடி திருத்தணி முருகன் கோவில் நிலம் மீட்பு
ரூ.25 கோடி திருத்தணி முருகன் கோவில் நிலம் மீட்பு
ரூ.25 கோடி திருத்தணி முருகன் கோவில் நிலம் மீட்பு
ADDED : டிச 11, 2025 05:35 AM

ஏழுகிணறு: திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமாக, ஏழுகிணறு பகுதியில் இருந்த 25 கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலம், நேற்று மீட்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 9575 சதுர அடி கோவில் நிலம், சென்னை, ஏழுகிணறு, தங்கசாலை தெரு, தியாகராஜ பிள்ளை தெரு, சுப்புசெட்டி தெருக்களில் உள்ளது.
இந்நிலத்தை, அப்பகுதியைச் சேர்ந்த பிரசாத், சேகர், பத்மாவதி, முருகன் உள்ளிட்ட 18 பேர் ஆக்கிரமித்து, கடைகள் மற்றும் வீடுகளை அமைத்திருந்தனர்.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து, கோவில் நிர்வாகம் சார்பில், வேலுார் இணை கமிஷனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, இடத்தை மீட்க உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை கமிஷனர் ரமணி தலைமையிலான அதிகாரிகள் நேற்று, ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டியிருந்த கட்டடங்களை இடித்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 25 கோடி ரூபாய் என, கோவில் அதிகாரிகள் கூறினர்.

