/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரண்டாக பிரியும் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்
/
இரண்டாக பிரியும் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்
ADDED : டிச 11, 2025 05:34 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து, 22 ஊராட்சிகளை பிரித்து, புதிதாக மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் உருவாகிறது.
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில், மொத்தம், 61 ஊராட்சிகள் உள்ளன. அதிக அளவிலான ஊராட்சிகள் கொண்டிருப்பதால், நிதி ஒதுக்குவது, திட்டங்கள் செயல்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக குறை பாடுகள் ஏற்படுகின்றன.
அதனால், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை, இரண்டாக பிரித்து, புதிய ஊராட்சி ஒன்றியம் ஒன்றை ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம், திட்ட வரைவு கேட்டிருந்தது.
இது குறித்து திட்டம் வரைவு தயாரித்த, கும்மிடிப் பூண்டி ஒன்றிய ஒன்றிய நிர்வாகம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் இருந்து, 22 ஊராட்சிகளை பிரித்து, புதிதாக மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்தி, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் இருந்து, 22 ஊராட்சிகளை பிரித்து புதிதாக மாதர்பாக்கம் ஒன்றியம் ஏற்படுத்துவதற்கான அரசாணையை, கடந்த 8ம் தேதி, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதில் பகுதி மக்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருப்பின், ஆறு வாரத்திற்குள் தெரிவித்தால், அரசு உரிய பரிசீலனை செய்யும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

