/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி
/
குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி
குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி
குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி
ADDED : ஜன 19, 2025 02:47 AM

சென்னை, யானைக்கவுனியில் குறைந்த விலையில் தங்க கட்டிகளை வாங்கி தருவதாக கூறி, 40 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைதுசெய்தனர்.
திருச்சி, மேற்கு விஸ்தரிப்பு, தில்லை நகர் முதல் கிராஸ் பகுதியை சேர்ந்த பிரவீன், 38 என்பவர், பூக்கடை துணை ஆணையரிடம் கொடுத்த புகார் மனு:
என் தந்தை மூக்கன் என்பவர் பங்குதாரராக நடத்தி வரும், திருச்சி பிரபல நகைக்கடையில், முதன்மை இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன்.
இந்த நகைக்கடையில், 2021ல் மேலாளராக பணி புரிந்தேன். அப்போது, மயிலாடு துறையை சேர்ந்த குரு சம்பத்குமார் என்பவர், ஆடிட்டர் எனக்கூறிஅறிமுகம் ஆனார்.
அவரது நண்பர் பாண்டிச்சேரியை சேர்ந்த லட்சுமிநாராயணன் என்பவர்,வருமான வரித்துறையில் வேலை பார்ப்பதாக கூறி, அவரையும் அறிமுகப்படுத்தினார்.
ஜி.எஸ்.டி., சம்பந்தமான வேலைகளை பார்த்து வருவதாகவும், வங்கிகளிடம் இருந்து தங்க கட்டிகளை சந்தை விலையிலிருந்து குறைவான விலைக்கு வாங்கி தருவதாகவும் குரு சம்பத் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பி, 2021ல், 40 லட்ச ரூபாயை,யானைக்கவுனி பகுதியில் உள்ள, குரு சம்பத்குமார் அலுவலகத்தில் அவரிடம் கொடுத்தேன்.
பின், நான்கு ஆண்டுகளாகியும் இருவரும் தங்கத்தை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்தனர். பணத்தை திருப்பி கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து யானைக்கவுனி போலீசார் வழக்கு பதிந்து விசாரணைமேற்கொண்டனர்.
அதில், அண்ணாநகர் மேற்கு, கலெக்டர் நகர் பிரதான சாலை, கோல்டன்பிளாட் பகுதியை சேர்ந்த குருசம்பத்குமார், 42 மற்றும் பாண்டிச்சேரி, முத்துபிள்ளை பாளையம், தமிழ் செங்கோடன் தெருவை சேர்ந்த லட்சுமிநாராயணன், 46, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களி டமிருந்து,- 'இன்னோவோ' கார் மற்றும் மூன்று மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் பயன்படுத்தும் காரில், அரசு பணியில் இல்லாமல், 'ஜி' மற்றும் 'அ' என்ற எழுத்துக்களை பயன்படுத்தியும், தமிழ்நாடு அரசு சின்னம் பொறித்த போலியான வி.ஐ.பி., பாஸ் தயார் செய்து காரின் முன்புறத்தில் ஒட்டி, அரசு துறையில் பணிபுரிவது போல நம்பவைத்து மோசடி செயல்களில் ஈடுபட்டதுதெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.