/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் விற்பனை
/
திருத்தணி விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் விற்பனை
திருத்தணி விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் விற்பனை
திருத்தணி விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் விற்பனை
ADDED : டிச 07, 2024 09:10 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. இந்நிலையில் வேர்க்கடலை, நெல் மற்றும் கரும்பு பயிருக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஜிப்சம், ஜிங்க் சல்பேட் போன்ற உரங்கள், விவசாயிகளுக்கு, மானிய விலையில் விற்பனை செய்வதற்கு வேளாண் துறையினர் தீர்மானித்தனர்.
அதன்படி மேற்கண்ட உரங்கள் பெறுவதற்கு, திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்திற்கு நேரில் வந்து மானிய விலையில் வாங்கிச் செல்லலாம் என, விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் பிரேம் கூறியதாவது:
திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை வேளாண் விரிவாக்க மையத்தில், 30,000 கிலோ ஜிப்சம், 1,500 கிலோ ஜிங்க் சல்பேட் தற்போது இருப்பு உள்ளது.
ஒரு விவசாயிக்கு, அதிகபட்சமாக 200 கிலோ ஜிப்சம், 10 கிலோ, ஜிங்க் சல்பேட் உரம் வழங்கப்படும். ஜிப்சம் ஒரு கிலோ, 4 ரூபாய். இதில் ஒரு கிலோவிற்கு, 1 ரூபாய் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
அதே போல, ஒரு கிலோ, ஜிங்க் சல்பேட், 68 ரூபாய். இதில் ஒரு கிலோவிற்கு, 25 ரூபாய் வழங்கப்படுகிறது. மேற்கண்ட உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சர்வே எண், ஆதார் கார்டு மற்றும் மொபைல் எண்ணுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
உரங்கள் இருப்பு உள்ளவரை மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
உரங்கள் வாங்கும் அனைத்து விவசாயிகளுக்கு அடியுரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.