/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணை கர்ப்பமாக்கிய காதலனுக்கு காப்பு
/
பெண்ணை கர்ப்பமாக்கிய காதலனுக்கு காப்பு
ADDED : அக் 18, 2024 07:19 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மொபைல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிக்கு சென்று வரும்போது, பள்ளிப்பட்டு தாலுகா ஜி.சி.எஸ். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த சிட்டிபாபு 25 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது அந்த பெண் 6 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிட்டிபாபுவிடம் வலியுறுத்தியுள்ளார். சிட்டிபாபுவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே திருமணம் செய்ய சிட்டிபாபு மறுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தன்னை ஏமாற்றிய சிட்டிபாபு மீது நடவடிக்கை எடுக்குமாறு திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிந்த இன்ஸ்பெக்டர் மலர், சிட்டிபாவை கைது செய்து, விசாரிக்கின்றார்.