/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாமந்தவாடா தரைப்பாலம் துண்டிப்பு
/
சாமந்தவாடா தரைப்பாலம் துண்டிப்பு
ADDED : டிச 17, 2024 11:52 PM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், சொரக்காய்பேட்டை, சாமந்தவாடா, புண்ணியம் வழியாக பாய்ந்து சென்று பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.
இதில், சொரக்காய்பேட்டை மற்றும் சாமந்தவாடா பகுதியில் தரைப்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டு தரைப்பாலங்களும் அடிக்கடி இடிந்து விழுவதும் மீண்டும் சீரமைக்கப்படுவதுமாக உள்ளன.
சொரக்காய்பேட்டை தரைப்பாலம் இடிந்து கிடந்தாலும் அந்த வழியாக தொடர்ந்து வாகனங்கள் பயணித்து வருகின்றன.
இந்நிலையில், சொரக்காய்பேட்டை அடுத்துள்ள சாமந்தவாடா மற்றும் ஞானம்மாள்பட்டடை இடையே கொசஸ்தலை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலமும் தற்போதைய வெள்ளத்தில் இடிந்து சிதைந்துள்ளது.
இதனால், இந்த வழியாக போக்குவரத்துக்கு நெடுங்சாலைத் துறையினர் தடை விதித்துள்ளனர். சாமந்தவாடா கிராமத்தினர் மாற்றுப்பாதையில் புண்ணியம் வழியாக சுற்றிக் கொண்டு பள்ளிப்பட்டு மற்றும் ஆந்திர மாநிலம், நகரி உள்ளிட்ட பகுதிக்கு செல்கின்றனர்.
சொரக்காய்பேட்டை, நெடியம் இடையேயான தரைப்பாலத்திலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அரசு வாகனங்களே தடையை மீறி பயணித்து வருகின்றன.