/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேய்பிறையாக மாறிய மின்கம்பம் சமத்துவபுரம் விவசாயிகள் அச்சம்
/
தேய்பிறையாக மாறிய மின்கம்பம் சமத்துவபுரம் விவசாயிகள் அச்சம்
தேய்பிறையாக மாறிய மின்கம்பம் சமத்துவபுரம் விவசாயிகள் அச்சம்
தேய்பிறையாக மாறிய மின்கம்பம் சமத்துவபுரம் விவசாயிகள் அச்சம்
ADDED : அக் 02, 2024 02:34 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் வீரகநல்லுார் ஊராட்சி சமத்துவபுரம் அருகே, 20க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் கரும்பு, நெல் போன்ற பயிர்கள் செய்து வருகின்றனர்.
விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் தரைமட்ட கிணறுகளின் மின்மோட்டார் இயக்குவதற்கு, மின்கம்பம் வாயிலாக இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக, 25க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் நடப்பட்டு, அதன் வாயிலாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்கம்பங்களை முறையாக பராமரிக்காததால், தற்போது மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது.
குறிப்பாக, இரண்டு விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் செல்லும், மூன்று மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளன. மின்கம்பத்தின் சிமென்ட் தளம் முழுதும் பெயர்ந்து வெறும் மின்கம்பிகள் மட்டுமே உள்ளன.
இந்த கம்பிகளும் துருப்பிடித்துள்ளதால், பலத்த காற்று அடித்தால் மின்கம்பம் உடைந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், பழுதடைந்த மின்கம்பங்கள் உள்ள பகுதியில் மட்டும் விவசாயிகள் பயிரிடாமல் அச்சத்தில் உள்ளனர்.
இந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் பொருத்த வேண்டும் என, விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த மூன்று மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.