நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே தமிழக - ஆந்திர எல்லையில், அண்ணாநகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை அவ்வழியே வந்த லாரியை மடக்கி போலீசார் சோதனை செய்தனர்.
அதில், மணல் இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக லாரி ஓட்டுனர், செங்காளம்மன் கண்டிகை, முரளி, 33, கைது செய்யப்பட்டு, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.