sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அலங்கோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது; சொல்கிறார் எல்.முருகன்

/

அலங்கோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது; சொல்கிறார் எல்.முருகன்

அலங்கோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது; சொல்கிறார் எல்.முருகன்

அலங்கோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது; சொல்கிறார் எல்.முருகன்

11


ADDED : பிப் 08, 2026 05:54 PM

Google News

ADDED : பிப் 08, 2026 05:54 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்து, அரசு பணியில் சேரும் தமிழக இளைஞர்களின் கனவை கலைத்த, அலங்கோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று நடைபெறவிருந்த நிலையில் திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதாகவும், சில தேர்வு மையங்களில் தேர்வர்களின் எண் இடம்பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.

சில இடங்களில் வினாத்தாள் வரவில்லை. பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட காரணத்தினால், தேர்வர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. திமுக அரசின் அலட்சியத்தால் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அலைக்கழித்து, தவிக்க வைத்துள்ள டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு பணியிடங்களுக்கான தேர்வைக் கூட நடத்த முடியாத லட்சணத்தில் தான் டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும், போலி திராவிட மாடல் திமுக அரசும் இருக்கிறது. திமுக அரசின் அலங்கோல ஆட்சியை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது இந்த நிகழ்வு. அரசு பணியில் சேரும் தமிழக இளைஞர்களின் கனவை கலைத்து, பணம் பறித்து, லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் திமுக மன்னர் குடும்பமும், திமுக அமைச்சர்களும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அலங்கோல ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது. வரும் சட்டசபைத் தேர்தலில் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us