sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திட்டமிட்ட சதி? டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து குறித்து திமுக அரசு மீது நயினாருக்கு சந்தேகம்

/

திட்டமிட்ட சதி? டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து குறித்து திமுக அரசு மீது நயினாருக்கு சந்தேகம்

திட்டமிட்ட சதி? டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து குறித்து திமுக அரசு மீது நயினாருக்கு சந்தேகம்

திட்டமிட்ட சதி? டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து குறித்து திமுக அரசு மீது நயினாருக்கு சந்தேகம்

3


ADDED : பிப் 08, 2026 04:46 PM

Google News

ADDED : பிப் 08, 2026 04:46 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் இன்று நடக்கவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்தது திமுக அரசின் திட்டமிட்ட சதியா? என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை; தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் அரசு செய்த குளறுபடிகளின் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நம்மை கொதிப்படையச் செய்கின்றன. ஆளும் அரசின் நிர்வாகத் தோல்விக்கு நமது இளைஞர்களின் பலமாத உழைப்பு வீணாவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அரியணை ஏறியதும் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளை வழங்குவோம் எனப் போலி வாக்குறுதி அளித்த திமுகவின் ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதில்லை என்பதையும், கமிஷன் அடிப்படையில் தான் அரசுப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் வெறும் 9 ஆயிரம் தேர்வாளர்கள் பங்குபெறும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளில் இத்தனை குளறுபடிகள் நடப்பது பலவித சந்தேகங்களை எழுப்புகிறது.

உண்மையிலேயே அரசுத் தேர்வுகளில் இம்மாதிரியான குழப்பங்கள் எதேச்சையாக நடைபெற்றனவா? அல்லது தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்ற அரசின் திட்டமிட்ட சதியா? என்பதை ஆதாரங்களுடன் பொதுமக்களிடம் விளக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் தார்மீகப் பொறுப்பு, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us