/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் சுகாதார வளாகம்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் சுகாதார வளாகம்
ADDED : நவ 05, 2024 11:01 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இங்கு தண்டலம் - அரக்கோணம் மற்றும் மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் 2013ல் 4.50 லட்சம் ரூபாயில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்டு 11 ஆண்டுகளாகியும் இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி வீணாகி வருவதோடு குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது.
இந்த சுகாதார வளாகம் பூட்டியே கிடப்பதால் மப்பேடு கூட்டுச் சாலைக்கு வரும் பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.