/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் பாதுகாப்பு உபகரணமின்றி குப்பை அகற்றும் துாய்மை பணியாளர்கள்

ADDED : ஜன 31, 2025 02:23 AM

திருவாலங்காடு,திருவாலங்காடு ஊராட்சியில், பாதுகாப்பு உபகரணங்களின்றி குப்பை அள்ளும் பணியில், துாய்மை பணியாளர்கள் ஈடுபடும் அவலநிலை நீடிக்கிறது.
ஊராட்சியின் 10 வார்டுகளில், திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை மற்றும் 80 தெருக்கள் உள்ளன. அவற்றில் தினமும், 1,000 கிலோ அளவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு குப்பை கழிவுகள் அகற்றப்படுகின்றன.
அவற்றை அகற்றும் பணியில், நிரந்தர மற்றும் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் என, 20 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கு, பணியின் போது பயன்படுத்தக்கூடிய கை உறை, உறுதியான துடைப்பம், மாஸ்க் உள்ளிட்ட, அரசு வழங்கும் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும், ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படுவதில்லை.
மேலும், குப்பை கொட்ட அமைக்கப்பட்ட தொட்டிகள் சேதமடைந்து உள்ளன. இதனால் பகுதிவாசிகள் குப்பையை ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர்.
மேலும், குப்பையை அள்ளிச்செல்ல பயன்படும் தள்ளுவண்டிகள் சில, பழுதடைந்து, நகர்த்த முடியாத நிலையில் உள்ளன.
இது குறித்து, ஒன்றிய ஆணையரிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து, திருவள்ளூர் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தால், தங்களுக்கு விடியல் கிடைக்கும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.