/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் விபத்து அச்சத்தில் பள்ளி மாணவர்கள்
/
திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் விபத்து அச்சத்தில் பள்ளி மாணவர்கள்
திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் விபத்து அச்சத்தில் பள்ளி மாணவர்கள்
திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் விபத்து அச்சத்தில் பள்ளி மாணவர்கள்
ADDED : மே 12, 2025 11:22 PM

திருவாலங்காடு,
திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சியில் பஜார் சாலை, பிராமணர் தெரு, காமராஜர் தெரு, காவலர் குடியிருப்பு என, 10க்கும் மேற்பட்ட தெருக்களில், 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இங்கு, மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கும் மழைநீர் செல்ல கழிவுநீர் கால்வாயுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், சில ஆண்டுகளாக கால்வாய்கள் பராமரிப்பு இல்லாததால் தூர்ந்துள்ளன.
இதனால், கடந்தாண்டு டிசம்பரில் பெய்த மழைநீருடன், குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியது. இதனால் பகுதிவாசிகள் கடும் அவதியடைந்தனர். எனவே, கால்வாய்களை தூர்வார வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது. அரசு மேல்நிலைப் பள்ளி முதல் காவல் நிலையம் வரை 100 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் தூர்வாரப்பட்ட போது, கால்வாயில் மூடப்பட்ட சிலாப் அகற்றப்பட்டது.
தூர்வாரப்பட்ட பின் பல இடங்களில் சிலாப்கள் மூடப்படவில்லை. திறந்தநிலையில் உள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், பள்ளியில் சேர்க்கை நடப்பதாலும், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வந்ததாலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
அவர்கள் தவறி கால்வாயில் விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாயை சிலாப் கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.