/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் அச்சத்தில் பள்ளி மாணவர்கள்
/
திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் அச்சத்தில் பள்ளி மாணவர்கள்
திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் அச்சத்தில் பள்ளி மாணவர்கள்
திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் அச்சத்தில் பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூன் 16, 2025 02:02 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரம் ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் அருகே அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது.
இப்பள்ளியில், 330க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். 10 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
பள்ளி பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கும் மழைநீர் செல்ல, கழிவுநீர் கால்வாயுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, தங்கு தடையின்றி மழைநீர் மற்றும் கழிவுநீர் சென்று வருகிறது.
கால்வாய் அமைக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலான நிலையில், தற்போது கான்கிரீட் சிலாப் கொண்டு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளி முதல், ஊராட்சி அலுவலகம் வரை 50 மீ., துாரத்திற்கு சிலாப் கொண்டு மூடப்படவில்லை. திறந்த நிலையில் உள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதில், மாணவர்கள் தவறி விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, திறந்த நிலையில் உள்ள கால்வாயை கான்கிரீட் சிலாப் கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.