/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொப்பூரில் குப்பைக்கு தீ பள்ளி மாணவர்கள் அவதி
/
கொப்பூரில் குப்பைக்கு தீ பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : செப் 12, 2025 02:34 AM

கொப்பூர்:கொப்பூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, நெடுஞ்சாலையோரம் தொட்டியுடன் குப்பை எரிக்கப்படுகிறது. இதனால், ஏற்படும் புகையால், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் கொப்பூர் ஊராட்சி, அரண்வாயல் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, இப்பகுதியில் சேகரமாகும் குப்பையை துாய்மை பணியாளர்கள் அகற்றாமல், தொட்டியுடன் தீ வைத்து எரித்து வருகின்றனர்.
இதனால் ஏற்படும் புகையால், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊராட்சி பகுதியில் குப்பை எரிப்பதை தடுத்து, முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.