ADDED : ஜன 23, 2025 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையில் இயங்கிவரும் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி வேன் நேற்று காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு, பேட்டை கண்டிகை வழியாக வந்து கொண்டிருந்தது.
அப்போது வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்தது. இதில், ஜீனத், 7 அப்ரோஸ், 9, ரியாஸ், 8, முகமது ரியாஸ், 9, ஆகிய மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இதில், முகமது ரியாஸ், திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, பொதட்டூர்பேட்டை போலீசார், கோணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுனர் சுரேஷ், 31, என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

