/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் குடம் சுமக்கும் மாணவியர் பிளேஸ்பாளையத்தில் அவலம்
/
குடிநீர் குடம் சுமக்கும் மாணவியர் பிளேஸ்பாளையத்தில் அவலம்
குடிநீர் குடம் சுமக்கும் மாணவியர் பிளேஸ்பாளையத்தில் அவலம்
குடிநீர் குடம் சுமக்கும் மாணவியர் பிளேஸ்பாளையத்தில் அவலம்
ADDED : டிச 21, 2024 01:11 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிளேஸ்பாளையம் கிராமம். இந்த கிராமம், தமிழக-ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவியருக்கு குடிநீர் தேவைக்காக மாணவர்கள் சிலர், அரை கி.மீட்டர் துாரத்தில் உள்ள, குடிநீர் குழாயில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம், நான்கு சிறுமியர் இரண்டு பெரிய குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு, சிரமப்பட்டு துாக்கி வந்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பள்ளி மாணவ, மாணவியரை வேலை செய்ய அனுமதிக்க கூடாது என, பள்ளி கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும், பெரிய குடங்களில் தண்ணீர் பிடித்து வரும் காட்சியால், பெற்றோர்கள் கடும் அதிருப்தியடைந்து உள்ளனர்.
எனவே, ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகம் பள்ளி வளாகத்தில் சுகாதார குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.