/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மத்துார் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
மத்துார் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : பிப் 19, 2025 01:32 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மத்துார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.
பள்ளி ஆசிரியர் பரந்தாமன் தலைமை வகித்தார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் எம். சுரேஷ் பங்கேற்று, அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்முறை விளக்கத்தோடு செய்து காண்பித்தனர்.
இதையடுத்து, கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உதவி தலைமை ஆசிரியர் தேவராஜ், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மேலும், கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றுகள் வழங்கப்பட்டன.