/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாடு மீது ஸ்கூட்டர் மோதி விபத்து: முதியவர் படுகாயம்
/
மாடு மீது ஸ்கூட்டர் மோதி விபத்து: முதியவர் படுகாயம்
மாடு மீது ஸ்கூட்டர் மோதி விபத்து: முதியவர் படுகாயம்
மாடு மீது ஸ்கூட்டர் மோதி விபத்து: முதியவர் படுகாயம்
ADDED : அக் 24, 2025 10:36 PM
திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே மாடு மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்தார்.
திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது புண்டரீகபுரம் கிராமம். இங்கு, குண்டு தெருவில் வசிப்பவர் ராமமூர்த்தி, 70. இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, திருவாலங்காடு பஜாருக்கு, 'ஹோண்டா ஸ்கூட்டி' வாகனத்தில் சென்றார்.
திருவள்ளூர் ---- அரக்கோணம் நான்கு வழிச்சாலையில், புண்டரீகபுரம் அருகே சென்றபோது, குறுக்கே வந்த மாடு மீது ஸ்கூட்டர் மோதியதில் ராமமூர்த்தி படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட வாகன ஓட்டிகள், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.