ADDED : ஜூன் 30, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரம்பாக்கம்,கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சகுந்தலா, 65, இவர், அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது எதிர்வீட்டில் வசித்து வரும் கபிலன், 23, என்பவரின் தந்தை இறந்ததற்கு, சகுந்தலா தான் காரணம் என, இரு குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று சகுந்தலா வீட்டிற்கு வந்த கபிலன், அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார்.
அக்கம்பக்கத்தினர் சகுந்தலாவை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.